Saturday, February 25, 2012

தோழியே நினைவு படுத்துகிறேன் நம் நட்பை





சுகமான நினைவுகள் என்றும் சுகம்தான்

நினைத்து அசைபோட

நிஜமாய் நான் உயிர் வாழ

நம் நட்பும் ஒரு காரணம்தான்

கவிதைக்காக சொல்ல வில்லை

காரணமாய் சொல்லுகிறேன்

இன்றும் தேடுகிறேன் தாய் மடியாய் உன்மடியை

ஆறுதலாய் வருவாயா தோள் சாய்த்து

கொள்வாயா

நிஜமாய் நேசித்த காதல் அருகில் இல்லை

அன்பாய் வார்த்தை சொல்ல யாரும்

அருகில் இல்லை

பெற்றோரிடம் என் சோகம் சொல்ல மனமில்லை

உன்னோடு சொல்லி தீர்த்தால்

என் உயிர் கொஞ்சம் வாழும்

நட்பின் கரம் நீட்டி

நண்பனாய் அழைக்கிறேன் வா தோழி!

 


 

தோழிக்கு தொலைதூரமான ஒரு நட்பின் கடிதம்


கண்கள் சொல்லும் சோகத்தை

சொல்லாமல் அறிவாய் நீ

முன்ஜென்மத்தில் என் தாய் நீ

இந்த ஜென்மத்தில் என் தோழியாய்

உன்னுடைய அழைப்புகள் வராதா

என எங்கும் மனங்களின் வரிசையில்

இப்போது நானும் காத்திருக்கிறேன்

எப்போதாவது பேசுகிறாய்

எப்படி மறந்து போகிறாய்

அழைக்க சில நேரம் மறந்தும் போகிறாய்

அப்போதும் உன் நட்பு தேடியே

காத்திருக்கும் என் மனம்

நிஜமாய் உனக்கு மனம் வருந்தும் போது

என் வாசல் தேடி வா

அதே நட்பின் தோள் கொண்டு காத்திருக்கிறேன்

நீ அறுதல் கொள்ள

உன் நண்பனாய் என்றும்

உன் நட்புடன் என்றும்

தொலைக்காதே நட்பின் முகவரியை

அது பறித்துவிட போகிறது

உன் புன்னகையை.

  நன்றி - ருத்ரன்
 

என் தோழிக்காக ஒரு கவிதை


நானும் தோழியும் பேசுகையில் - அவள்

எல்லாம் கவியாக்கி என்னை

அசர வைத்தாய் என்னை பற்றி

ஒரு கவிதை சொல் என்றாள்,

புன் சிரிப்பை உதிர்த்து விட்டு

சொல்கிறேன் என்றேன் சில நொடி

மௌனமாய் நின்றேன் -- அவள்

கவிதை வரவில்லையா

நான் ரசிக்கும் பொருளில்லையா

என்று கேட்டு சிரித்தாள்,

கவிதைக்கு கவிதை சொல்ல

எப்படி நான் தொடங்க

என்று யோசித்தேன் வார்த்தையை யாசித்தேன்

இயற்கை ஒரு கவிதை!

நிலவும் ஒரு கவிதை!

காதலும் ஒரு கவிதை!

பெண்ணும் ஒரு கவிதை!

மேற்சொன்னவை எல்லாம்

ஒவ்வொன்றும் ஒரு அழகு

என் தோழி நீ மட்டும்

எல்லாமே அழகு!

உன்னை பற்றி என்றால்

என் கவிதைகளின் தாயகம் நீ என்பேன்

தலை முதல் பாதம் வரை

நீ நடக்கின்ற பூ என்பேன்

விரல்கள் எல்லாமே கம்பி இல்லா வீணை

என்பேன்

விழிகள் திராட்சை என்பேன்

எரியும் கோளம் என்பேன்

கம்பன் இருந்திருந்தால் உன்னை

இன்னும் வர்ணிப்பான்

எனக்கு வரவில்லை கவிதைக்கு கவிதை சொல்ல

என்ன நான் செய்ய

விட்டு விடவா கவிதை சொல்ல

நான் சொன்னதை அவள் கேட்டு

நிஜமாய் நகைத்து விட்டாள்

கவிதை அழகு என்றாள்

நொடியில் கவிதை சொல்ல உன்னால்

மட்டுமே முடியும் என்றாள்

நீ என் நண்பன் என்பதால் எனக்கு

பெருமை என்றாள்

விட்டு கொடுப்பதெல்லாம் நட்புக்கு இல்லை

என்று சொல்லாமல் சொல்லி விட்டாய்

எனக்கு நட்பின் அழகை புரியவைத்தாய்

உன் நட்பு தான் கிடைக்க என்ன தவம்

நான் செய்தேன் என்று சிரித்து நின்றேன்.

நன்றி - Rudhran

Wednesday, February 22, 2012

சுகி சிவம் படைப்புகள் Audio Books




கிரிவல மகிமை - பதிவிறக்கம் செய்ய க்ளிக் செய்யவும்

அண்ணாமலையாரின் அற்புதங்கள் - பதிவிறக்கம் செய்ய க்ளிக் செய்யவும்

Bhagavad Gita Audio Book - Speech by Suki Sivam



சுகி சிவம் அவர்களின் பகவத் கீதை சொற்பொழிவு ஆடியோ வடிவில் 13 பகுதிகளாக உள்ளது.

பதிவிறக்கம் செய்ய

பகுதி  - 1
பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 4
பகுதி - 5

பகுதி - 6
பகுதி - 7
பகுதி - 8
பகுதி - 9
பகுதி - 10

பகுதி - 11
பகுதி - 12
பகுதி - 13




Youtube link for you tube liker Full speech by Mr. Suki Sivam

Click here for listen