Saturday, February 25, 2012

தோழியே நினைவு படுத்துகிறேன் நம் நட்பை





சுகமான நினைவுகள் என்றும் சுகம்தான்

நினைத்து அசைபோட

நிஜமாய் நான் உயிர் வாழ

நம் நட்பும் ஒரு காரணம்தான்

கவிதைக்காக சொல்ல வில்லை

காரணமாய் சொல்லுகிறேன்

இன்றும் தேடுகிறேன் தாய் மடியாய் உன்மடியை

ஆறுதலாய் வருவாயா தோள் சாய்த்து

கொள்வாயா

நிஜமாய் நேசித்த காதல் அருகில் இல்லை

அன்பாய் வார்த்தை சொல்ல யாரும்

அருகில் இல்லை

பெற்றோரிடம் என் சோகம் சொல்ல மனமில்லை

உன்னோடு சொல்லி தீர்த்தால்

என் உயிர் கொஞ்சம் வாழும்

நட்பின் கரம் நீட்டி

நண்பனாய் அழைக்கிறேன் வா தோழி!

 


 

No comments:

Post a Comment