Friday, July 15, 2011

அழகிய கவிதைகள்

         காதலி, மழை, காதலன், கவிதை ஆகிய நான்கும் ஒன்றாய்க் கலந்த பிரிக்க  முடியாக் கலவையே இந்தத் தொகுப்பு.



நின்ற பின்னும்
சிறிது நேரம்
இலை தங்கும் மழைப்போல
நின்றுபோன இடத்தில் எல்லாம்

கொஞ்சநேரமாவது தங்கிச்

செல்கிறது அழகு.







எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள்

என்றாய்

நீ மழையில் நனைவது

கண்டதிலிருந்து என்றேன்

ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்

அடுத்த மழைப் பெய்யத் தொடங்கியது

நீயும் நனையத் தொடங்கினாய்

நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்.




எவ்வளவு பத்திரமாய்

நடந்தாலும்

உன்னையும் அறியாமல்

வழியெங்கும்

பெய்துகொண்டே

செல்கிறது

உன் அழகுமழை.




          ஆகா!!! முழுக்க முழுக்க காதலும் கவிதையும் மழையாய்ப் பொழிகின்றன


 ஜன்னலில் பார்த்ததைவிடவும்

பக்கத்தில் பார்த்தல்

அழகு!

நீயும்!

மழையும்!






வார்த்தையாகக் கூட இல்லை

ஒரு எழுத்தாகக் கூட

இல்லாதவனை

ஒரு கவிஞனாய் மாற்றிய

பெருமை

உனக்கும்

மழைக்கும் மட்டுமே!



           யாரைத்தான் காதலிக்கிறார் இவர்? மழையையா தன் காதலியையா?
 


மழை ரசித்தாலும்

உனை ரசித்தாலும்

நேரம் கடப்பதும் தெரிவதில்லை

உயிர் கரைந்து

ஓடுவதும் தெரிவதில்லை.

No comments:

Post a Comment